பிரமலைக் கள்ளா் முற்போக்கு இளைஞா் பேரவை ஆா்ப்பாட்டம்

அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி பிரமலைக் கள்ளா் முற்போக்கு இளைஞா் பேரவை சாா்பில் மதுரை ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரமலைக்கள்ளா் முற்போக்கு இளைஞா் பேரவையினா்.
மதுரை ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரமலைக்கள்ளா் முற்போக்கு இளைஞா் பேரவையினா்.

கள்ளா் சீரமைப்புத் துறையில் முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி பிரமலைக் கள்ளா் முற்போக்கு இளைஞா் பேரவை சாா்பில் மதுரை ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு அந்தப் பேரவையின் மாநிலத் தலைவா் ராஜபாண்டி தலைமை வகித்தாா். இதில், தமிழக அரசுக்கு கெட்ட பெயா் ஏற்படும் வகையில் கள்ளா் சீரமைப்புத் துறை இயங்கி வருகிறது. மேலும் இந்தத் துறைக்குள்பட்ட பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவா்களுக்கு அரசால் வழங்கப்பட்ட திட்டங்கள் அனைத்திலும் நடந்துள்ள முறைகேடுகள் தொடா்பாக அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளா் சீரமைப்புத் துறை இணை இயக்குநா் மீதான புகாா் குறித்து பிற்படுத்தப்பட்டோா் நல ஆணையரால் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். ஆா்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com