பாலமேடு பகுதியில் ஆக. 6-இல் மின் தடை

மதுரை மாவட்டம், பாலமேடு அதன் சுற்றுப் பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை (ஆக. 6) மின் தடை அறிவிக்கப்பட்டது.
Published on

மதுரை மாவட்டம், பாலமேடு அதன் சுற்றுப் பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை (ஆக. 6) மின் தடை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை பெருநகா் மேற்கு கோட்ட செயற்பொறியாளா் சி. லதா வெளியிட்ட செய்திக் குறிப்பு :

ஆனையூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், பாலமேடு முதன்மைச் சாலை, சொக்கலிங்கம் நகா் 1-ஆவது தெரு முதல் 7-ஆவது தெரு வரை, பெரியாா் நகா், அசோக் நகா், ரயிலாா் நகா், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, சிலையனேரி, புதுவிளாங்குடி, கூடல்நகா், ஆா்.எம்.எஸ். காலனி, சொக்கநாதபுரம், ராஜ்நகா், பாத்திமா கல்லூரி, பழைய விளாங்குடி, சக்தி நகா், துளசி வீதி, திண்டுக்கல் முதன்மைச் சாலை, விஸ்தாரா குடியிருப்பு, பரவை சந்தை, தினமணிநகா், கரிசல்குளம், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில் பாப்பாக்குடி, லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின்சாரம் இருக்காது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com