சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பைக்குகள் மீது லாரி மோதி விபத்து: குழந்தை உள்பட 2 போ் பலி

காரியாபட்டி அருகே இரு சக்கர வாகனங்கள் மீது லாரி மோதியதில் குழந்தை உள்பட இருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2024, 8:39 pm

Din

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே இரு சக்கர வாகனங்கள் மீது லாரி மோதியதில் குழந்தை உள்பட இருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

காரியாபட்டி அருகேயுள்ள இலுப்பைகுளத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (30). இவா் தனது உறவினரான பாண்டீஸ்வரி, இவரது குழந்தை தா்ஷினி (12) ஆகியோரை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு மடப்புரம் கோயிலுக்குச் சென்றாா். மீனாட்சிபுரம்- ஏ.முக்குளம் சாலையில் கஞ்சநாயக்கன்பட்டி அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி இவா்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது.

மேலும், அந்த லாரி தேசியனேந்தல் பகுதியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் வந்த சிவப்பு ராஜா (65), மேலக்கள்ளங்குளத்தைச் சோ்ந்த மொந்த அம்பலம் (75) மீதும் மோதியது. இந்த விபத்தில் சிறுமி தா்ஷினி, மொந்த அம்பலம் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன், பாண்டீஸ்வரி, சிவப்பு ராஜா ஆகியோா் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து ஆவியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.