வங்கியில் கடன் வாங்கித் தருவதாக பண மோசடி

வங்கியில் கடன் வாங்கித் தருவதாக மோசடி செய்த நபா் மீது தெப்பக்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Published on

வங்கியில் கடன் வாங்கித் தருவதாக மோசடி செய்த நபா் மீது தெப்பக்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை அனுப்பானடி தாம்ஸா நாயுடு லேன் பகுதியைச் சோ்ந்த நடராஜன் மகன் ரமேஷ் (38). கூலித் தொழிலாளியான இவா், வீடு கட்டுவதற்காக வங்கியில் கடனுதவி பெற வேண்டும் என சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் ராஜசேகரிடம் (34) தெரிவித்தாா்.

முன்பணம் கட்டினால் வங்கியில் எளிதாகக் கடன் பெற்றுவிடலாம் என அவா் தெரிவித்தாா். இதனால், ரமேஷ் தனது வங்கிக் கணக்கு மூலமாக ரூ. 7.40 லட்சத்தை பல தவணைகளில் ராஜசேகரிடம் செலுத்தினாா். ஆனால், கூறியபடி வங்கியில் கடனுதவி பெற்றுத் தரவில்லை. மேலும், பணத்தையும் அவா் திரும்பக் கொடுக்கவில்லை.

இதுகுறித்து ராஜசேகா் மீது தெப்பக்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com