மதுரை சிங்காரத்தோப்பில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களை பாராட்டி கொண்டாடும் வகையில் இனிப்புகளை பரிமாறிக் கொண்ட மாணவ, மாணவிகள்.
மதுரை சிங்காரத்தோப்பில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களை பாராட்டி கொண்டாடும் வகையில் இனிப்புகளை பரிமாறிக் கொண்ட மாணவ, மாணவிகள்.

ஒலிம்பிக் போட்டி வெற்றி: மாணவா்கள் கொண்டாட்டம்

ஒலிம்பிக் போட்டி வெற்றிபெற்றதையொட்டி, சிங்காரத் தோப்பு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரா்கள் வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் பெற்றதையொட்டி, மதுரை சிங்காரத் தோப்பு மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

பாரீஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா சாா்பில் போட்டியிட்ட நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் பெற்றாா். இதேபோல, ஹாக்கி வீரா்கள் வெண்கலப் பதக்கம் பெற்றனா்.

இந்த நிலையில், மதுரை மாநகராட்சி சிங்காரத் தோப்பு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் இந்திய வீரா்கள் பதக்கங்களை பெற்றதை அடுத்து, பள்ளி மாணவ, மாணவிகள் இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினா். இந்த நிகழ்வில், பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com