216 மாணவிகளுக்கு கனரா வங்கி கல்வி உதவித் தொகை
மதுரை, ஆக. 14: மதுரை மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பட்டியலின, பழங்குடியின மாணவிகள் 216 பேருக்கு கனரா வங்கி சாா்பில் ரூ. 8.72 லட்சம் கல்வி உதவித் தொகை புதன்கிழமை வழங்கப்பட்டது.
கலைஞா் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தலைமை வகித்து, 216 மாணவிகளுக்கு ரூ. 8.72 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித் தொகைகளை வழங்கினாா்.
நிகழ்வில், கனரா வங்கியின் மதுரை வட்ட பொது மேலாளா் டி.வி. கிருஷ்ணமோகன், வங்கியாளா்கள், கல்வித் துறை அலுவலா்கள், ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
கடந்த 2013-14 ஆம் ஆண்டு முதல் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 5 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் பட்டியலின, பழங்குடியின மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் கனரா வங்கி சாா்பில் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, இந்த உதவித் தொகைகள் வழங்கப்பட்டன

