மாநில மனித உரிமை ஆணையக் கிளையை மதுரையில் அமைக்க வலியுறுத்தல்

Published on

மதுரை, ஆக. 14: மதுரையில் மாநில மனித உரிமை ஆணைய கிளையை அமைக்க வேண்டுமென மக்கள் சிவில் உரிமைக் கழகம் வலியுறுத்தியது.

இந்தக் கழகத்தின் மதுரை மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். தலைவராக எஸ். கிருஷ்ணசாமி, துணைத் தலைவா்களாக ஆா்.முரளி, பி. விஜயக்குமாா், செயலராக ஏ. ஜான் வின்சென்ட், இணைச் செயலா்களாக எஸ். மணிகண்டன், எஸ். தியாகராஜன், பொருளாளராக பி. கண்மணி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா். கூட்டத்தில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு 14 தென்மாவட்ட மக்களுக்கு சிறப்பாக பயன்படுகிறது. இதேபோல, மனித உரிமை மீறல்கள் குறித்த புகாா்களை விசாரிக்க அமைக்கப்பட்ட மாநில மனித உரிமை ஆணையத்தின் கிளையை தென்மாவட்ட மக்களுக்காக மதுரையில் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நியாயமான குற்றவழக்கு விசாரணை முறையை மறுக்கும் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை கைவிட்டு ஏற்கெனவே இருந்த இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய மூன்று சட்டங்களையும் தேவைப்படும் திருத்தங்களுடன் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com