நாளை முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டம்
மதுரை மாவட்ட முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டம், கொடி நாள் நிகழ்ச்சி ஆகியன மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை (டிச. 7) நடைபெறுகிறது.

Updated On :5 டிசம்பர் 2024, 10:50 pm

மதுரை மாவட்ட முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டம், கொடி நாள் நிகழ்ச்சி ஆகியன மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை (டிச. 7) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
படைவீரா் கொடி நாள் விழா, மாவட்ட ஆட்சியரகத்தின் தரை தளத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து, முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தோருக்கான குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.
முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தவா்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளை இரட்டைப் பிரதிகளைக் கொண்டு மனுக்களாக அளித்து தீா்வு பெறலாம் என்றாா் அவா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...