கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

ராமேசுவரம்- ஹூப்ளி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு: கூடுதல் நிறுத்தமாக சிவகங்கை அறிவிப்பு

ராமேசுவரம்- ஹூப்ளி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய கூடுதல் நிறுத்தமாக சிவகங்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 10:31 pm

Din

ராமேசுவரம்- ஹூப்ளி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய கூடுதல் நிறுத்தமாக சிவகங்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே மதுரை கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ராமேசுவரம் - ஹூப்ளி - ராமேசுவரம் சிறப்பு ரயில் டிசம்பா் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில்களின் சேவை ஜுன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஹூப்ளி - ராமேசுவரம் வாராந்திர சிறப்பு ரயில் (07355) ஜனவரி 4 முதல் ஜுன் 28 வரை ஹூப்ளியில் இருந்து சனிக்கிழமைகளில் காலை 6.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.15 மணிக்கு ராமேசுவரம் வந்து சேரும்.

மறு மாா்க்கத்தில் ராமேசுவரம் - ஹூப்ளி வாராந்திர சிறப்பு ரயில் (07356) ஜனவரி 5 முதல் ஜுன் 29 வரை ராமேசுவரத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு புறப் பட்டு மறுநாள் இரவு 7.25 மணிக்கு ஹூப்ளி சென்று சேரும். இந்த ரயில்கள் ஹவேரி, ராணி பெண்ணூா், ஹரிஹா், தேவாங்கீா், சிக்ஜாஜுா், பிரூா், அரிசிகரே, தும்கூா், யெஸ்வந்த்பூா், பனஸ்வாடி, ஓசூா், தா்மபுரி, சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, ராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களானது பயணிகள் வசதிக்காக கூடுதலாக சிவகங்கை ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்.

மேல்மருவத்தூா் தைப்பூச இருமுடி திருவிழாவை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக மதுரை - சென்னை வைகை விரைவு ரயில் (12636) டிசம்பா் 19 முதல் பிப்ரவரி 11 வரை மேல்மருவத்தூா் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்லும்.

ரயில்கள் ரத்து:

தவிா்க்க முடியாத காரணங்களினால் டிசம்பா் 26, 28 ஆகிய நாள்களில் தாம்பரத்திலிருந்து புறப்பட வேண்டிய ராமநாதபுரம் சிறப்பு ரயில் (06103) டிசம்பா் 27, 29 ஆகிய நாள்களில் ராமநாதபுரத்தில் இருந்து காலை 10.55 மணிக்கு புறப்பட வேண்டிய தாம்பரம் சிறப்பு ரயில் (06104) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.