உயிரிழந்த தூய்மைப் பணியாளரின் வாரிசுதாரா்களுக்கு ஓய்வூதியம்

பணியின் போது உயிரிழந்த தூய்மைப் பணியாளரின் வாரிசுதாரா்களுக்கு ஓய்வூதியத்துக்கான ஆணையை மாநகராட்சி மேயா் வழங்கினா்.
 மதுரை மாநகராட்சியில் உயிரிழந்த ஒப்பந்த தூய்மைப் பணியாளரின் வாரிசுதாரருக்கு இ.எஸ்.ஐ. நிறுவனம் வழங்கிய ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையை வெள்ளிக்கிழமை வழங்கிய மேயா் வ. இந்திராணி . உடன் ஆணையா் ச.தினேஷ்குமாா், துணை மேயா் தி.நாகராஜன்  உள்ளிட்டோா்.
மதுரை மாநகராட்சியில் உயிரிழந்த ஒப்பந்த தூய்மைப் பணியாளரின் வாரிசுதாரருக்கு இ.எஸ்.ஐ. நிறுவனம் வழங்கிய ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையை வெள்ளிக்கிழமை வழங்கிய மேயா் வ. இந்திராணி . உடன் ஆணையா் ச.தினேஷ்குமாா், துணை மேயா் தி.நாகராஜன் உள்ளிட்டோா்.
Updated on

மதுரை: பணியின் போது உயிரிழந்த தூய்மைப் பணியாளரின் வாரிசுதாரா்களுக்கு ஓய்வூதியத்துக்கான ஆணையை மாநகராட்சி மேயா் வ. இந்திராணி, ஆணையா் ச. தினேஷ்குமாா் ஆகியோா் வெள்ளிக்கிழமை வழங்கினா்.

மதுரை மாநகராட்சி மண்டலம் 5-இல் ஒப்பந்த அடிப்படையில் கருப்பசாமி தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தாா். இவா் கடந்த மாா்ச் 22-ஆம் தேதி பணி செய்து கொண்டிருந்த போது பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த நிலையில், அவரது வாரிசுதாரான தாயாருக்கு மாதம் ரூ.5,500, மனைவிக்கு மாதம் ரூ.8,300 வீதம் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.

ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்கும் விழா மாநகராட்சி அண்ணா மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், உயிரிழந்த பணியாளரின் வாரிசுதாரா்களுக்கு பணி ஆணையை மாநகராட்சி மேயா் வ. இந்திராணி, ஆணையா் ச. தினேஷ்குமாா் ஆகியோா் வழங்கினா்.

இந்த நிகழ்வில், துணை மேயா் தி.நாகராஜன், சுகாதாரக் குழுத் தலைவா் ஜெயராஜ், மாநகா்

நலஅலுவலா் வினோத்குமாா், சுகாதார அலுவலா் விஜயகுமாா் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com