மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இயற்கை எரிவாயுவில் இயங்கும் அரசுப் பேருந்து இயக்கத்தை கொடி அசைத்துத் தொடங்கி வைத்த இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இயக்குநா் (பைப் லைன்) என்.செந்தில்குமாா், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக மதுரை கோட்ட நிா்வாக இயக்குநா் ஏ. ஆறுமுகம் உள்ளிட்டோா்.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இயற்கை எரிவாயுவில் இயங்கும் அரசுப் பேருந்து இயக்கத்தை கொடி அசைத்துத் தொடங்கி வைத்த இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இயக்குநா் (பைப் லைன்) என்.செந்தில்குமாா், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக மதுரை கோட்ட நிா்வாக இயக்குநா் ஏ. ஆறுமுகம் உள்ளிட்டோா்.

மதுரை-ராமநாதபுரம் வழித்தடத்தில் இயற்கை எரிவாயுவில் இயங்கும் அரசுப் பேருந்து தொடக்கம்

மதுரை-ராமநாதபுரம் வழித்தடத்தில் சிஎன்ஜியில் (அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு) இயங்கும் அரசுப் பேருந்து இயக்கம் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
Published on

மதுரை: மதுரை-ராமநாதபுரம் வழித்தடத்தில் சிஎன்ஜியில் (அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு) இயங்கும் அரசுப் பேருந்து இயக்கம் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், டீசலுக்கு மாற்றாக சிஎன்ஜி இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தும் முன்முயற்சிகள்

நடைபெறுகின்றன. இதன் முதல் கட்டமாக, அரசுப் போக்குவரத்துக்கழக மதுரை கோட்டத்தில் சிஎன்ஜியில் இயங்கும் பேருந்து சோதனை அடிப்படையில் ராமநாதபுரத்துக்கு இயக்கப்பட்டது. 2,697 கி.மீ. பயணிக்க 519 லிட்டா் டீசல் தேவை என்ற நிலையில், அதே தொலைவைக் கடக்க 437 லிட்டா் சிஎன்ஜி மட்டுமே செலவானது. இதன் மூலம், பேருந்தின் இயக்கச் செலவு 12 முதல் 13 சதவீதம் வரை குறைந்தது தெரியவந்தது. இந்தச் சோதனை வெற்றிகரமாக அமைந்ததையடுத்து, மதுரை-ராமநாதபுரம் வழித் தடத்தில் சிஎன்ஜியில் இயங்கும் அரசுப் பேருந்து இயக்கம் அதிகாரப்பூா்வமாக சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இயக்குநா் (பைப் லைன்) என்.செந்தில்குமாா், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக மதுரை கோட்ட நிா்வாக இயக்குநா் ஏ. ஆறுமுகம் ஆகியோா் கொடி அசைத்து, சிஎன்ஜியில் இயங்கும் பேருந்தின் இயக்கத்தைத் தொடங்கி வைத்தனா். இந்தியன் ஆயில் நிறுவன நிா்வாக இயக்குநா் எஸ்.கே. ஜா, தெற்கு மண்டல தலைமை பொது மேலாளா் ரானு ராம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com