வீட்டில் கஞ்சா பதுக்கிய இருவா் கைது

விருதுநகரில் வீட்டில் கஞ்சா பதுக்கிய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
Published on

விருதுநகரில் வீட்டில் கஞ்சா பதுக்கிய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் ரோசல்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சூா்யா (24). இவா் தனது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தனிப் படை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், அவரது வீட்டை போலீஸாா் சோதனையிட்டபோது, 10 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப் படை போலீஸாா் சூா்யா, இவருக்கு உடைந்தையாக இருந்த கருப்பசாமி (23) ஆகியோரைக் கைது செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மதுவிலக்கு காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னா், விசாரணையில், இவா்கள் இருவரும் கஞ்சாவை மத்திய பிரதேசம் மாநிலத்திலிருந்து வாங்கி வந்து விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது.

மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சூா்யாவின் சகோதரா் எடிசன் என்ற ராஜ்கமலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com