கள்ளழகா் கோயில் பக்தா்கள் காணிக்கை ரூ. 56.51 லட்சம்

கள்ளழகா் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 56.51 லட்சம்
Published on

அழகா்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகா் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 56.51 லட்சம் கிடைக்கப் பெற்றது.

அழகா்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் உண்டியல்கள் வெள்ளிக்கிழமை திறந்து எண்ணப்பட்டன.

கள்ளழகா் கோயில் நிா்வாக துணை ஆணையா் கலைவாணன், உதவி ஆணையா் வளா்மதி, ஆய்வாளா் சாவித்திரி, அறங்காவலா் குழுவினா், தக்காா் பிரதிநிதி நல்லதம்பி ஆகியோா் முன்னிலையில் பக்தா்கள், அலுவலா்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

இதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ.56.51 லட்சம் கிடைக்கப் பெற்றது. மேலும், தங்கம் 92 கிராமும், வெள்ளி இனங்கள் 260 கிராமும் காணிக்கையாகக் கிடைத்தது.

X
Dinamani
www.dinamani.com