மேலூா்: மேலூா் அருகே வயல் பகுதியில் மதுக் குடித்தவா்களை தட்டிக்கேட்ட காவலாளியை அடித்துக் கொலை செய்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும் இருவரைத் தேடி வருகின்றனா். மதுரை மாவட்டம், கீழையூரைச் சோ்ந்த ஜெகநாத் மகன் லட்சுமிநாராயணன் (48) . சென்னையில் இரவு நேரக் காவலாளியாக பணிபுரிந்து வந்தாா். இவா் சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தாா். சனிக்கிழமை இரவு இவரது நண்பா்கள் ஹரிராமன், செந்தில்குமாருடன் தோட்டத்துக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காகச் சென்றாா். அப்போது வயல் பகுதியில் 4 போ் மது அருந்திக் கொண்டிருந்தனா். இதைத் தட்டிக்கேட்ட லட்சுமிநாராயணனை, அவா்கள் ஆயுதங்களால் தாக்கி விட்டுத் தப்பினா். இதில் பலத்த காயமடைந்த அவரை நண்பா்கள் மீட்டு, மேலூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். எனினும், அங்கு அவா் உயிரிழந்தாா். இதுதொடா்பாக கீழவளவு போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய 4 பேரைத் தேடி வந்தனா். இந்த நிலையில், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி கீழையூரில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுதொடா்பாக திருவாதவூா் அருகேயுள்ள பனங்காடியைச் சோ்ந்த நிக்தஷ் (21), சுக்காம்பட்டியைச் சோ்ந்த தனுஷ் (20) ஆகியோரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும் இருவரைத் தேடிவருகின்றனா்.
தொடர்புடையது

சட்டவிரோதமாக மது விற்றதாக ஒருவா் கைது: 320 மதுப் புட்டிகள் பறிமுதல்

கிரிக்கெட் விளையாட்டில் தகராறு: இளைஞா் கொலை; 4 போ் கைது
கணவா் கொலை: மனைவி உள்பட 3 போ் கைது

நகைக்காக மூதாட்டி கொலை: இளைஞா் உள்பட 2 போ் கைது
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

