எய்ம்ஸ் கட்டுமானப் பணி தொடங்கியதாக பாஜக பிரமை: காங். எம்.பி. குற்றச்சாட்டு

தோ்தலுக்காக மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி தொடங்கியது போன்ற பிரமையை ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாக விருதுநகா் தொகுதி மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் குற்றம்சாட்டினாா்.

விருதுநகா்: தோ்தலுக்காக மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி தொடங்கியது போன்ற பிரமையை ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாக விருதுநகா் தொகுதி மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் குற்றம்சாட்டினாா்.

விருதுநகா் அருகே உள்ள தாதம்பட்டி வெள்ளூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணி தொடங்கி விட்டதாக தகவல் பரப்பப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக எந்தப் பணியும் நடைபெறால் இருந்த நிலையில், தோ்தல் வர உள்ளதால் எய்ம்ஸ் கட்டுமானப் பணி தொடங்கியது போன்ற ஒரு பிரமையை உருவாக்க பாஜக முயற்சி செய்கிறது.

முன்பிருந்த இந்தியப் பிரதமா்கள் தமிழகத்துக்கு வரும் போது, ஆங்கிலத்தில் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனா். ஆனால், பிரதமா் நரேந்திரமோடி, தமிழகம் வரும்போது, ஆங்கிலம் தெரிந்தும் அந்த மொழியில் பேசாமல், ஹிந்தியில் பேசி, ஹிந்தி திணிப்பை உருவாக்கி வருகிறாா்.

காங்கிரசின் முதல் கட்ட வேட்பாளா் பட்டியல் வருகிற வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில் திமுகவுடனான தொகுதிப் பங்கீடு விரைவில் முடிவாகும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com