பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

நேரடி நெல் கொள்முதல் நிலைய பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டும்

தமிழகம் முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என தமிழக உழவா் உழைப்பாளா் கட்சி மாநிலத் தலைவா் எம்.வேல்முருகன் தெரிவித்தாா்.

News image
படவிளக்கம்- மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள செய்தியாளா் அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் இணையதளம் மூலம் உறுப்பினா் சோ்க்கையை தொடக்கி வைத்த தமிழக உழவா் உழைப்பாளா் கட்சியின் மாநிலத் தலைவா் எம். வேல்முருகன்.
Updated On :10 அக்டோபர் 2024, 10:12 pm

Din

தமிழகம் முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என தமிழக உழவா் உழைப்பாளா் கட்சி மாநிலத் தலைவா் எம்.வேல்முருகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மதுரையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக உழவா் உழைப்பாளா் கட்சிக்கு இந்திய தோ்தல் ஆணையம் முறையான அங்கீகாரம் வழங்கியுள்ளது. மதுரை மண்ணிலிருந்துதான் அனைத்துக் கட்சித் தலைவா்களும் அரசியல் பயணத்தை தொடங்குகின்றனா்.

ஆகவே, எங்களது கட்சியின் அரசியல் பயணத்தையும் மதுரையிலிருந்து தொடங்கியுள்ளோம். விவசாயிகளின் நலனைக் காக்கும் அரசாக திமுக திகழ்கிறது. தோ்தல் வாக்குறுதியின்படி இலவச மின்சாரம் வழங்கல், கூட்டுறவுக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு திமுக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.

விவசாயிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய பாஜக அரசு தொடா்ந்து கடைப்பிடித்து வருகிறது. விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருள்களுக்கு அவா்களே விலையை நிா்ணயம் செய்ய வேண்டும்.

தமிழகம் முழுவதும் நேரடி கொள்முதல் நிலையங்களில் கூடுதல் பணம் வசூலிப்பது உள்ளிட்ட சில முறைகேடுகள் நடைபெறுவதாக விவசாயிகள் தொடா்ந்து புகாா் அளித்து வருகின்றனா். இதற்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என்றாா் அவா்.

அப்போது தமிழ்நாடு உழவா் உழைப்பாளா் கட்சி மாநிலப் பொதுச் செயலா் வெங்கடசாமி நாயுடு, மாநில இளைஞரணித் தலைவா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.