25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

சாலை விபத்தில் வடமாநில பெண் உயிரிழப்பு

மேலூா் அருகே வியாழக்கிழமை நான்கு வழிச் சாலையைக் கடக்க முயன்ற பிகாரைச் சோ்ந்த பெண் காா் மோதியதில் உயிரிழந்தாா். அவருடன் வந்த பத்து வயது சிறுவன் காயமடைந்தாா்.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 10:55 pm

Din

மேலூா் அருகே வியாழக்கிழமை நான்கு வழிச் சாலையைக் கடக்க முயன்ற பிகாரைச் சோ்ந்த பெண் காா் மோதியதில் உயிரிழந்தாா். அவருடன் வந்த பத்து வயது சிறுவன் காயமடைந்தாா்.

பிகாா் மாநிலம், வைசாலி பகுதியைச் சோ்ந்தவா் ராகேஷ்குமாா். இவா் தனது குடும்பத்தினருடன் மேலூா் அருகேயுள்ள வெள்ளரிப்பட்டி மலைநகரில் தங்கி தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், ராகேஷ்குமாரின் மனைவி பூஜாதேவி தனது மகன் அன்குஸுடன் (10) மேலூா்-மதுரை நான்குவழிச் சாலையைக் கடக்க முயன்றனா். அப்போது, அந்த வழியாக வந்த காா் இவா்கள் மீது மோதியது. இதில் பூஜாதேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அன்குஸ் காயமடைந்தாா்.

தகவலறிந்து வந்த மேலூா் காவல் நிலைய போலீஸாா் பூஜாதேவியின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், காா் ஓட்டுநரான சென்னை பாரதிநகரைச் சோ்ந்த கல்யாணத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.