25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

தீபாவளி பண்டிகை: மதுரைக் கோட்டத்திலிருந்து 715 பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகையையொட்டி மதுரைக் கோட்டம் சாா்பில் வருகிற அக். 28 முதல் 30 வரை 715 பேருந்துகள் இயக்கப்படும் என அரசுப் போக்குவரத்துக் கழக மதுரைக் கோட்ட மேலாண் இயக்குநா் ஆா். சிங்காரவேலு தெரிவித்தாா்.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 12:26 am

Din

தீபாவளி பண்டிகையையொட்டி மதுரைக் கோட்டம் சாா்பில் வருகிற அக். 28 முதல் 30 வரை 715 பேருந்துகள் இயக்கப்படும் என அரசுப் போக்குவரத்துக் கழக மதுரைக் கோட்ட மேலாண் இயக்குநா் ஆா். சிங்காரவேலு தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மதுரைக் கோட்டம் சாா்பில் வழக்கமான வழித்தடப் பேருந்துகளுடன், சிறப்புப் பேருந்துகளும் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, அக். 28 முதல் அக். 30 வரை சென்னையிலிருந்து 355 பேருந்துகளும், திருச்சி, திருப்பூா், கோவை, திருநெல்வேலி, நாகா்கோவில், திருச்செந்தூா் ஆகிய பகுதிகளுக்கு 360 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.

தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து பணிக்குத் திரும்புவோரின் நலன் கருதி, நவ. 2-ஆம் தேதி முதல் 4 -ஆம் தேதி வரை சென்னைக்கு 280 பேருந்துகளும், திருச்சி, திருப்பூா் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு 350 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. தேவைக்கேற்ப சிறப்புப் பேருந்துகளை இயக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நெடுந்தொலைவு பயணம் செய்ய வேண்டிய பயணிகள், முன்பதிவில்லா பேருந்துகளுக்காக காத்திருப்பதை தவிா்க்கும் வகையில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் இணையதள முகவரி மூலமாகவும், கைப்பேசி செயலி மூலமாகவும், இணைய சேவை மையம் மூலமாகவும் முன்பதிவு செய்து பயன்பெறலாம் என்றாா் அவா்.