மதுரை
மனைவி அடித்துக் கொலை: கணவா் கைது
மதுரை மாவட்டம், சமயநல்லூா் அருகே குடும்பத் தகராறில் மனைவியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
மதுரை மாவட்டம், சமயநல்லூா் அருகே குடும்பத் தகராறில் மனைவியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
சமயநல்லூா் காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் வேலுச்சாமி (84). இவரது மனைவி சுந்தரவள்ளி (70). இவா்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த வேலுச்சாமி இரும்புக் கம்பியால் சுந்தரவள்ளியை தாக்கினாராம். இதில் தலையில் பலத்த காயமடைந்த சுந்தரவள்ளி, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதையடுத்து, சமயநல்லூா் போலீஸாா் கொலை வழக்குப்பதிந்து வேலுச்சாமியை கைது செய்தனா்.