ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

மாநகராட்சி வளா்ச்சித் திட்டப் பணிகள் அமைச்சா்கள் ஆய்வு

மதுரை மாநகராட்சி வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா்கள் பி. மூா்த்தி, பழனிவேல் தியகாராஜன் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

News image
மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாநகராட்சி வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் பி. மூா்த்தி, பழனிவேல் தியாகராஜன். உடன், மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, மேயா் வ. இந்திராணி. கூட்டத்தில் பங்கேற்ற அலுவலா
Updated On :5 செப்டம்பர் 2024, 12:29 am

Din

மதுரை மாநகராட்சி வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா்கள் பி. மூா்த்தி, பழனிவேல் தியகாராஜன் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற இதற்கான ஆய்வுக் கூட்டத்தில், தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி, தகவல், தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் ஆகியோா் பங்கேற்று வளா்ச்சித் திட்டப் பணிகளின் செயலாக்க நிலை குறித்து ஆய்வு செய்தனா்.

மாநகராட்சி மூலம் செயல்படுத்தப்படும் முல்லைப் பெரியாறு குடிநீா்த் திட்டப் பணிகள், புதை சாக்கடைத் திட்டப் பணிகள், பாலங்கள் அமைக்கும் பணிகள், சாலைப் பணிகள், வடகிழக்குப் பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து அவா்கள் ஆய்வு செய்தனா்.

மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, மாநகராட்சி மேயா் வ. இந்திராணி, மாநகராட்சி ஆணையா் ச. தினேஷ்குமாா், கூடுதல் ஆட்சியா் மோனிகா ராணா, மாவட்ட வருவாய் அலுவலா் ர. சக்திவேல், மாநகராட்சி துணை மேயா் தி. நாகராஜன், மாநகராட்சி அலுவலா்கள், மாமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.