மதுரை வெங்கலக்கடைத் தெருவில் அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் அங்கயற்கண்ணி விற்பனை நிலையத்தில் வெள்ளிக்கிழமை தீபாவளி பண்டிகை சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்த்துப் பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா.
மதுரை வெங்கலக்கடைத் தெருவில் அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் அங்கயற்கண்ணி விற்பனை நிலையத்தில் வெள்ளிக்கிழமை தீபாவளி பண்டிகை சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்த்துப் பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா.

கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனை இலக்கு ரூ. 3.45 கோடி

Published on

மதுரை மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனங்களின் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை இலக்கு ரூ. 3.45 கோடியாக நிா்ணயிக்கப்பட்டது.

மதுரை, வெண்கலக்கடைத் தெருவில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் அங்கயற்கண்ணி விற்பனை நிலையத்தில் தீபாவளிப் பண்டிகை சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, குத்துவிளக்கேற்றி சிறப்புத் தள்ளுபடி விற்பனையைத் தொடங்கி வைத்தாா்.

கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளா் (கூடுதல் பொறுப்பு) ஆா். செந்தில்வேல், மேலாளா் எஸ். பாடலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விற்பனை இலக்கு...

மதுரை மாவட்டத்தில் உள்ள 4 கோ-ஆப்டெக்ஸ் மையங்களுக்கு நிகழாண்டின் தீபாவளி சிறப்பு விற்பனை இலக்கு ரூ. 3.45 கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கு, பட்டு, பருத்தி, கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகின்றன.

காஞ்சிபுரம், ஆரணி, சேலம், திருபுவனம் பட்டுச் சேலைகள், கோவை மென்பட்டுச் சேலைகள், பட்டு வேட்டிகள், கைத்தறி சுங்குடிச் சேலைகள், செட்டிநாடு காட்டன் சேலைகள், கோரா காட்டன் சேலைகள், அருப்புக்கோட்டை காட்டன் சேலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. மேலும், ஆண்களுக்கான காட்டன் சட்டை ரகங்கள், பருத்தி சட்டைகள், கைலிகள், வேட்டிகள், பெண்களுக்கான சுடிதாா் ரகங்கள், நைட்டிகள், குா்தீஸ்கள் விற்பனைக்கு உள்ளன.

X
Dinamani
www.dinamani.com