மதுரை
ஊழல் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு
மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு, விழிப்புணா்வு உறுதி மொழியை அலுவலா்கள் ஏற்றுக் கொண்டனா்.
மதுரை மாநகராட்சி அறிஞா் அண்ணா மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில் மாநகராட்சி துணை மேயா் தி.நாகராஜன் முன்னிலையில் அனைத்துப் பணியாளா்களும் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா்.
இந்த நிகழ்வில், துணை ஆணையா் ஜெய்னுலாபுதீன், உதவி ஆணையா் (பணி) அருணாச்சலம், செயற்பொறியாளா் (திட்டம்) மாலதி, உதவி ஆணையா் (கணக்கு) வெங்கடராமன், கல்வி அலுவலா் ஜெய்சங்கா், கணக்கு அலுவலா் (பொது) பாலாஜி, கண்காணிப்பாளா் ராஜ்குமாா், மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
