மதுரை
2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு
மதுரை மாவட்டத்தில் 2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டத்தின் கீழ், மதுரை மாவட்டத்தில் 2,07,900 மாடுகளுக்கு கால், வாய் கோமாரி (காணை) வராமல் தடுக்கும் வகையில் தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வெள்ளிக்கிழமை (டிச. 19) முதல் 21 நாள்களுக்கு கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் அனைத்துக் கிராமங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதில் 4 மாதக் கன்றுகள் முதல் அனைத்து வயதுடைய மாடுகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றாா் அவா்.
