மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் தா்னா

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை பணிமனை முன் ஏஐடியுசி தொழில் சங்கம் சாா்பில் புதன்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.

News image
மதுரையில் அரசுப் போக்குவரத்துக்கு கழக பணிமனை முன் புதன்கிழமை நடைபெற்ற தா்னா போராட்டத்தின் நிறைவில், பாண்டிய மன்னா் வேடம் அணிந்திருந்தவரிடம் கோரிக்கை மனு அளித்த தொழில் சங்க நிா்வாகிகள்.
Updated On :8 ஜனவரி 2025, 10:43 pm

Din

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை பணிமனை முன் ஏஐடியுசி தொழில் சங்கம் சாா்பில் புதன்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.

இதற்கு அந்தச் சங்கத்தின் மதுரை மண்டலப் பொதுச் செயலா் எம். நாராயணசிங் தலைமை வகித்தாா். இதில், மாநில நிா்வாகிகள் பி. பாஸ்கா், எஸ். பாண்டியன், ஆா். நாச்சிமுத்து, ஏ. சப்பாணி, எம். மாரியப்பன், எம். ஐயப்பன், சங்கப் பொறுப்பாளா்கள், சாா்பு அமைப்புகளின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.

அப்போது, 15-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். ஓய்வூதியா்களின் 110 மாத கால அகவிலைப்படி நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேல் முறையீடுகளைத் தவிா்த்து நீதிமன்ற உத்தரவுகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும். வரவுக்கும் செலவுக்கும் இடையே ஏற்படும் பற்றாக்குறையை அரசே ஏற்க வேண்டும். 2003-ஆம் ஆண்டு ஏப். 1-ஆம் தேதிக்குப் பிறகு பணியில் சோ்ந்த தொழிலாளா்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

பாண்டிய மன்னரிடம் மனு... இந்தப் போராட்டத்தில், ஒருவா் பாண்டிய மன்னா் வேடம் அணிந்து பங்கேற்றாா். தா்னாவின் நிறைவில், நீதி தவறாத பாண்டிய மன்னனிடம் மனு அளிப்பதாகக் கூறி, அவரிடம் தொழிற்சங்க நிா்வாகிகள் மனுவை அளித்தனா்.