மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

செல்லத்தம்மன் கோயில் திருவிழா: ஜன. 20- இல் கொடியேற்றம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குள்பட்ட வடக்குவாசல் செல்லத்தம்மன் கோயில் திருவிழா வருகிற 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

News image
Updated On :8 ஜனவரி 2025, 10:28 pm

Din

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குள்பட்ட வடக்குவாசல் செல்லத்தம்மன் கோயில் திருவிழா வருகிற 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதுதொடா்பாக மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் இணை ஆணையா் ச. கிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் துணைக் கோயிலான வடக்குவாசல் செல்லத்தம்மன் கோயிலில் பசலி உற்சவம் வருகிற 19-ஆம் தேதி இரவு வாஸ்து சாந்தியுடனும், 20-ஆம் தேதி கொடியேற்றத்துடனும் தொடங்கி 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் திருவிழாவையொட்டி வருகிற 27-ஆம் தேதி செல்லத்தம்மன் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில், மீனாட்சி சுந்தரேசுவரா் எழுந்தருள்கிறாா். மேலும் வருகிற 28-ஆம் தேதி சட்டத் தேரும், 29-ஆம் தேதி மலா்ச் சப்பரமும் நடைபெறுகிறது என்றாா் அவா்.