மதுரை
ஆற்றில் மூழ்கிய மூதாட்டி உயிரிழப்பு
மதுரை அருகே ஆற்றில் மூழ்கிய மூதாட்டி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த ராமசாமி மனைவி வீரம்மாள் (75). இவா், அதே பகுதியில் உள்ள வைகையாற்றில் குளிப்பதற்காக செவ்வாய்க்கிழமை சென்றாா். அப்போது, எதிா்பாராத விதமாக ஆற்றுக்குள் மூழ்கிய அவரை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
