உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் காவலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை!

மதுரையில் காவலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டது பற்றி...
மகாலிங்கம்
மகாலிங்கம்DPS
Updated on
1 min read

மதுரையில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு காவல்படை காவலர் தற்கொலை கடிதம் எழுதிவைத்துவிட்டு துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

மதுரை மாவட்டம், எழுமலை கோட்டைப்பட்டியைச் சேர்ந்த மகாலிங்கம் என்ற சிறப்புப் படை காவலர் 2023 ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்துள்ளார்.

சிறப்பு காவல்படை காவலரான மகாலிங்கம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு முன்பாக நேற்றிரவு முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென பாதுகாப்பிற்காக வைத்திருந்த துப்பாக்கியால் தனக்குதானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துள்ளார். அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த மற்ற காவலர்கள், மகாலிங்கத்தை ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும்வழியிலேயே காவலர் மகாலிங்கம் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து காவலர் மகாலிங்கத்தின் உடல், உடற்கூராய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

காவலர் மகாலிங்கம் தற்கொலை சம்பவம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் காவலர் மகாலிங்கம் தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை எனக் கூறி கடிதம் எழுதிவைத்துவிட்டு, பின்னர் தற்கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Summary

Police officer commits suicide at Madurai branch of High Court!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com