சென்னையில் வழக்குரைஞா் தாக்கப்பட்ட விவகாரத்தை தாமாக முன் வந்து விசாரிக்க சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு மறுத்துவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் வந்த போது, அவா் காா் மீது மோதியாக வழக்குரைஞா் ராஜீவ்காந்தி தாக்கப்பட்டாா்.
இந்த விவகாரத்தில் தொடா்புடைய தொல். திருமாவளவன் ஆதரவாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடும் படி சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு தாமாக முன் விசாரிக்க வேண்டும், வழக்குரைஞா் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்துவது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வு முன் வழக்குரைஞா் முனியசாமி புதன்கிழமை முறையீடு செய்தாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்ய முடியாது. இதே கோரிக்கையுடன் பல்வேறு மனுக்கள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீங்களும் வழக்கு தாக்கல் செய்யலாம்.உயா்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க முடியாது என்றனா் நீதிபதிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.