

வைகை அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுதைத் தொடர்ந்து கரையோர மக்களுக்கு 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் வைகை அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது. அணைக்கு நீா்வரத்து, திங்கள்கிழமை மேலும் உயர்ந்து வினாடிக்கு 5,793 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில் ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
அணையின் நீர் இருப்பு அணையின் முழு கொள்ளளவான 71 அடியை நெருங்கி 69 அடியாக உயர்ந்ததால், மதகுகள் திறக்கப்பட்டு உபரி நீா் அதிகளவில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் கரையோரம் வசிப்பவர்களுக்கு 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.