சிறப்பு ரயில்
ரயில்!(படம் - தெற்கு ரயில்வே எக்ஸ்)

ராமநாதபுரம் - ராமேசுவரம் ரயில் சேவை ரத்து!

ராமநாதபுரம்- ராமேசுவரம் ரயில் சேவை செவ்வாய்க்கிழமை (அக். 28) முதல் சனிக்கிழமை (நவ. 1) வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.
Published on

ரயில்வே பரமாரிப்புப் பணிகள் காரணமாக, ராமநாதபுரம்- ராமேசுவரம் ரயில் சேவை செவ்வாய்க்கிழமை (அக். 28) முதல் சனிக்கிழமை (நவ. 1) வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.

இதுகுறித்து மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு : ரயில்வே மின் பாதை பராமரிப்புப் பணி காரணமாக, ராமநாதபுரம் - ராமேசுவரம் ரயில் சேவை செவ்வாய்க்கிழமை (அக். 28) முதல் சனிக்கிழமை (நவ. 1) வரை ரத்து செய்யப்படுகிறது.

இதன்படி, மதுரையிலிருந்து காலை 6.50 மணிக்கு புறப்படும் ராமேசுவரம் பயணிகள் ரயில் (56711) ராமநாதபுரத்துடன் நிறுத்தப்படும். இதேபோல, ராமேசுவரம் - மதுரை (56714) பயணிகள் ரயில் ராமநாதபுரத்திலிருந்து மதுரைக்கு இயக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com