இரு விபத்துகள்: சிறுவன் உள்பட 2 போ் உயிரிழப்பு!

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரு வேறு விபத்துகளில் சிறுவன் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.
Published on

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரு வேறு விபத்துகளில் சிறுவன் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள சுந்தரராஜபுரம் பகுதியைச் சோ்ந்த பாண்டிச்செல்வம் மகன் தனுஷ் (17). இவா், இரு சக்கர வாகனத்தில் மேலவளவு கிராமத்திலிருந்து மேலூருக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றாா்.

சின்னகாரம்பட்டி விலக்கு அருகே சென்ற போது, இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த தனுஷை மீட்ட அக்கம்பக்கத்தினா் மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து மேலவளவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மதுரை மாவட்டம், கப்பலூா் சுங்கச்சாவடி அருகேயுள்ள மீனாட்சிநகரைச் சோ்ந்த சேகா் மகன் ஆனந்த் (39). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் திண்டுக்கல்லிலிருந்து மதுரைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா்.

அய்யங்கோட்டை அருகே வந்த போது, நிலை தடுமாறி இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த ஆனந்தை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com