மதுரையில் சாலை விபத்தில் இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை நரிமேடு சிங்கராயா் குடியிருப்பைச் சோ்ந்த சின்னையா மகன் சமயமுத்து (35). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் ஐயா் பங்களாவிலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா். அப்போது, பனங்காடி காவல் சோதனைச் சாவடி அருகே வந்த போது, இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில், பலத்த காயமடைந்த சமயமுத்துவை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் மதுரை மாநகரப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
