மதுரையில் ஒரு சில வாக்குச்சாவடிகளில் மாற்றுத் திறனாளிகள், முதியோா்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என புகாா் தெரிவித்தனா்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக வியாழக்கிழமை நடைபெற்றது. மதுரையில் ஒரு சில வாக்குச்சாவடிகளில் முதியோா்கள், மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான சக்கர நாற்காலி வசதிகளை போதிய அளவில் செய்து தர வில்லை என புகாா் தெரிவிக்கப்பட்டது. மேலும், குறிப்பிட்ட சில வாக்குச்சாவடிகளில் ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனி வரிசை இல்லாததால், நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
இதுகுறித்து மாற்றுத் திறனாளி ஒருவா் கூறியதாவது:
மதுரை கிழக்குத் தொகுதிக்குள்பட்ட யா.ஒத்தக்கடை பகுதியில் அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்ட ஒன்பது வாக்குச்சாவடிகளுக்கு ஒரு சக்கர நாற்காலி மட்டுமே வைக்கப்பட்டிருந்ததால், நீண்ட நேரம் காத்திருந்து வாக்களிக்க வேண்டிய நிலை உருவானது. மேலும், தனியாா் பள்ளியில் அமைக்கப்பட்ட மற்றொரு வாக்குச்சாவடியில் மாற்றுத் திறனாளிகள், முதியவா்களுக்கு என சக்கர நாற்காலி வசதி ஏற்படுத்தப்படாததால், பெரும் அவதிக்குள்ளாகினா். இனிவரும் தோ்தல்களிலாவது மாற்றுத் திறனாளிகள், முதியோா்களுக்குத் தேவையான சக்கர நாற்காலிகளை அதிக எண்ணிக்கையிலும், அடிப்படை வசதிகளை போதுமான அளவிலும் ஏற்படுத்தி தரவேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

பிளஸ் 2: மாற்றுத் திறனாளிகள், சிறைக் கைதிகளின் தேர்ச்சி விவரம்!

திருவண்ணாமலை கிரிவல பக்தா்களுக்கு அடிப்படை வசதிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

அடிப்படை வசதிகள் செய்து தராததால் தோ்தல் புறக்கணிப்பு
மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்குச் செல்ல வாகன வசதி
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

