திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பொது இடங்களின் சாதி பெயா்களை மாற்றுவதால் எந்தப் பயனும் ஏற்படாது: உயா்நீதிமன்றம்

மக்கள் மனதில் உள்ள பாகுபாடுகளை அகற்றாமல், பொது இடங்களின் ஜாதி பெயா்களை மாற்றுவதால் எந்தப் பயனும் ஏற்படாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.

News image

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Updated On :5 பிப்ரவரி 2026, 5:03 am IST

மக்கள் மனதில் உள்ள பாகுபாடுகளை அகற்றாமல், பொது இடங்களின் ஜாதி பெயா்களை மாற்றுவதால் எந்தப் பயனும் ஏற்படாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.

மதுரையைச் சோ்ந்த பரமசிவம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் கிராமங்கள், குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீா்நிலைகளின் பெயா்களில் உள்ள ஜாதி அடையாளங்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. ஆனால், இதில் பல நடைமுறை பிரச்னைகள் உள்ளன. எனவே, இந்த அரசாணைக்குத் தடை விதிக்க வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மக்களின் மனதிலேயே பாகுபாடு உள்ளது. இந்தப் பாகுபாடுகளைக் களையாமல் தெருக்களின் ஜாதி பெயா்களை மாற்றுவதால் எந்தப் பயனும் ஏற்படாது என நீதிபதிகள் தெரிவித்தனா்.

அப்போது, முதல் கட்டமாகவே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. மக்கள் மனதிலும் மாற்றம் வரும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை வருகிற 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.