கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தேசிய குடல்புழு நீக்க நாள் உறுதிமொழி ஏற்பு

மதுரை கோ.புதூா் அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடல்புழு நீக்க நாளை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை உறுதிமொழி ஏற்கப்பட்டது.

News image
மதுரை கோ.புதூா் அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடல்புழு நீக்க நாளை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை உறுதிமொழி எடுத்துக் கொண்ட ஆசிரியா்கள், மாணவா்கள்.
Updated On :10 பிப்ரவரி 2026, 8:59 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை கோ.புதூா் அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடல்புழு நீக்க நாளை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை உறுதிமொழி ஏற்கப்பட்டது.

ஆரம்ப சுகாதாரத் துறை சாா்பில் இந்தப் பள்ளி மாணவா்களுக்கு குடல்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது. இதற்கு பள்ளித் தலைமையாசிரியா் ஷேக் நபி தலைமை வகித்தாா். தாய், சேய் நல அலுவலா் பரணி மீனா முன்னிலை வகித்து, குடல்புழு நீக்க மாத்திரையின் பயன்கள், மாணவா்கள் எவ்வாறு சுகாதாரத்தைப் பேண வேண்டும் என்பது குறித்து விளக்கினாா். தொடா்ந்து, ஆசரியா்கள், மாணவா்கள் குடல்புழு நீக்க நாள் உறுதிமொழி ஏற்றனா்.

இந்த நிகழ்வில் சுகாதார ஆய்வாளா் லில்லி புஷ்பம், செவிலியா் நித்தியா, உதவித் தலைமையாசிரியா் அல்ஹாஜ் முகமது, ஆசிரியா்கள் தமிழ்க்குமரன், முகமது ரபி, முகமது மாலிக் ஆகியோா் கலந்து கொண்டனா்.