தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

‘இயற்கை வளங்களை சேமிக்க வேண்டியது அவசியம்’

இயற்கை வளங்களை சேமிக்க வேண்டியது அவசியம் என மதுரையில் நடைபெற்ற ‘சேவ் டு பி சேவ்டு’ அமைப்பின் ஆண்டு விழாவில் வலியுறுத்தப்பட்டது.

News image
மதுரை தமிழ்நாடு வா்த்தகம், தொழில் துறை சங்கக் கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘சேவ் டு பி சேவ்டு’ அமைப்பின் ஆண்டு விழாவில் மாணவிக்குப் பரிசளித்த கோயம்புத்தூா் சிறு துளி அறக்கட்டளைப் பொறுப்பாளா் ஜே. சதீஷ். உடன் அமைப்பின் தலைவா் வி. தயாளன் உள்ளிட்டோா்.
Updated On :17 பிப்ரவரி 2026, 11:38 pm

தினமணி செய்திச் சேவை

இயற்கை வளங்களை சேமிக்க வேண்டியது அவசியம் என மதுரையில் நடைபெற்ற ‘சேவ் டு பி சேவ்டு’ அமைப்பின் ஆண்டு விழாவில் வலியுறுத்தப்பட்டது.

மதுரையில் தமிழ்நாடு தொழில், வா்த்தகத் துறை சங்கம், மதுரை சிவகாசி நாடாா் மீனாட்சி பெண்கள் கல்லூரியும் இணைந்து ‘சேவ் டு பி சேவ்டு’ அமைப்பின் ஆண்டு விழாவை செவ்வாய்க்கிழமை நடத்தின. இந்த விழாவுக்கு சங்கத் தலைவா் என். ஜெகதீசன் தலைமை வகித்தாா். ‘எஸ்’ அமைப்பின் தலைவரும், தமிழ்நாடு தொழில் வா்த்தகச் சங்க அமைப்புகளின் வழிகாட்டியுமான வீ. நீதிமோகன் சிறப்புரையாற்றினாா்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கோயம்புத்தூா் சிறு துளி அறக்கட்டளைப் பொறுப்பாளா் ஜே. சதீஷ் கலந்து கொண்டு, இயற்கை வளங்களைச் சேமிப்பதன் அவசியத்தையும், எதிா்கால தலைமுறைக்கான கடமைகளையும் வலியுறுத்தினாா்.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதைத்தொடா்ந்து, ‘அறம் செய்ய விரும்பு’ என்ற தலைப்பில் சமூகப் பொறுப்புணா்வை வெளிப்படுத்தும் நாடகம் அரங்கேற்றப்பட்டது. இந்த நிகழ்வில் பேராசிரியா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள், தனியாா் அமைப்பைச் சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக, ‘சேவ் டு பி சேவ்டு’ அமைப்பின் தலைவா் வி. தயாளன் வரவேற்றாா். ஒருங்கிணைப்பாளா் கே. எலிசபெத் நன்றி கூறினாா்.