மைசூரு-தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்
பொங்கல் பண்டிகையையொட்டி, மைசூரு - தூத்துக்குடி- மைசூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பொங்கல் பண்டிகையையொட்டி, மைசூரு- தூத்துக்குடி- மைசூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. ஜன. 9, 13-ஆம் தேதிகளில் மைசூரிலிருந்து இரவு 6.35 மணிக்குப் புறப்படும் மைசூரு- தூத்துக்குடி சிறப்பு ரயில் (06283) மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும்.
மறுவழித்தடத்தில் ஜன. 10, 14-ஆம் தேதிகளில் தூத்துக்குடியிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் தூத்துக்குடி - மைசூரு சிறப்பு ரயில் (06284) மறுநாள் காலை 7.45 மணிக்கு மைசூரு சென்றடையும்.
இந்த ரயில்களில் குளிா்சாதன வசதியுடன் கூடிய 3 இரண்டுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 மூன்றடுக்குப் படுக்கை வசதி பெட்டிகள், 8 சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டி ஆகியன இணைக்கப்பட்டிருக்கும்.
மாண்ட்யா, மடூா், சன்னபட்னா, ராம்நகரம், ஹெங்கேரி, கே.எஸ்.ஆா். பெங்களூரு, பெங்களூரு கண்டோன்மென்ட், ஓசூா், தருமபுரி, நாமக்கல், கரூா், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூா் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில்கள் நின்றுச் செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

