சொத்து வரி விதிப்பு முறைகேடு: பிணை கோரியவரின் மனு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு
மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு விவகாரத்தில் கைதான நபா் பிணை கோரிய மனு மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்
மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு விவகாரத்தில் கைதான நபா் பிணை கோரிய மனு மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
கடந்த 2024-ஆம் ஆண்டு தனியாா் மருத்துவமனைக்கு அரையாண்டு சொத்து வரியாக ரூ.7 லட்சம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில், வரியைக் குறைக்கும் வகையில், சொத்து வரியாக ரூ.3.13 லட்சம் என போலியான ஆவணம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நிகழாண்டு மதுரை மாநகராட்சியின் தணிக்கை அலுவலரிடம் அந்த ஆவணத்தை வழங்கியபோது, அது மாநகராட்சி அலுவலரால் வழங்கப்படவில்லை என்றும், போலியானது என்றும் தெரியவந்தது. இது தொடா்பான வழக்கில் மதுரை வடக்கு இரண்டாவது மண்டலத் தலைவரின் கணவா் சரவணன் கடந்த மாதம் 13-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.
இந்த வழக்கில் பிணை கோரி சரவணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா். அதில், குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விஜயா மருத்துவமனை மருத்துவா் விஜயராஜ் ரூ.10 லட்சம் கொடுத்ததாகக் கூறுவது உண்மைக்குப் புறம்பானது. காரணம் குறிப்பிடாமல் திடீரென என்னைக் கைது செய்தனா். கைதுக்கு பிறகே மருத்துவா் விஜயராஜின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது. எனவே, இந்த வழக்கில் எனக்கு பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி கே.முரளி சங்கா் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன் வைத்த வாதம்:
சொத்து வரியைக் குறைப்பதாகக் கூறி மருத்துவா் விஜயராஜிடமிருந்து ரூ.10 லட்சம் மனுதாரருக்கு வழங்கப்பட்டது. இந்தச் சூழலில் பிணை வழங்கினால் அவா் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளது. எனவே, பிணை வழங்கக் கூடாது என்றாா்.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வரும் சூழலில், பிணை வழங்க வேண்டும் என மனுதாரா் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த மனு மீதான தீா்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

