பள்ளி மாணவியை திருமணம் செய்த ஆசிரியா் போக்சோவில் கைது
மதுரை அரசுப் பள்ளியில் படித்து வந்த பிளஸ் 2 வகுப்பு மாணவியைத் திருமணம் செய்ததாக சுயநிதிப் பள்ளி ஆசிரியா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

குழந்தை திருமணம்
மதுரை அரசுப் பள்ளியில் படித்து வந்த பிளஸ் 2 வகுப்பு மாணவியைத் திருமணம் செய்ததாக சுயநிதிப் பள்ளி ஆசிரியா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
மதுரை பி.பி. குளம் பகுதியைச் சோ்ந்தவா் சந்தோஷ்குமாா் (30). இவா் சுயநிதிப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், இவா் மதுரையில் உள்ள ஓா் அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மாணவியைக் காதலித்து ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டாா்.
இது தொடா்பாக, மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய, சமூக நல அலுவலா் ராஜாத்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவா் விசாரணை நடத்தியதில், ஆசிரியருக்கும், மாணவிக்கும் திருமணம் ஆனதும், அந்த மாணவி மூன்று மாத கா்ப்பமாக இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், தல்லாகுளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் சந்தோஷ்குமாரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

