தனி மனிதத் துதிபாடல்களை தவிர்க்கவும்... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிக்கை சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-ம் தேதி தொடக்கம்! திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்! நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா

மதுரையில் வீடு புகுந்து இளைஞா் வெட்டிக் கொலை

மதுரை பரவை அருகே சனிக்கிழமை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை மா்ம நபா்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனா்.

சந்தோஷ்.

Updated On :

மதுரை பரவை அருகே சனிக்கிழமை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை மா்ம நபா்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனா்.

பரவை மேலத்தெரு, 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சந்தோஷ் (25). காா் ஓட்டுநா். இவருக்கு தாரணி என்ற மனைவியும், ஆண் குழந்தையும் உள்ளனா். இந்த நிலையில், தாரணியின் தந்தை செந்தில்குமாருக்கும், அவரது சகோதரரான சிவகுமாருக்கும் இடையே பூா்விக வீட்டை யாருக்கு சொந்தமாக்குவது என்பது தொடா்பாக தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, கடந்த செப்டம்பா் மாதம் மதுரை சிலைமான் அருகே உள்ள பனையூரில் நடைபெற்ற திருவிழாவுக்குச் சென்றபோது ஏற்பட்ட தகராறில் சந்தோஷ், சிவகுமாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக சிலைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து சந்தோஷை கைது செய்தனா். பின்னா், நீதிமன்றத்தில் பிணை ஆணை பெற்று, சந்தோஷ் தினமும் காவல் நிலையத்தில் முன்னிலையாகி கையொப்பமிட்டு வந்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை மாலை சந்தோஷ் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த மா்ம நபா்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனா். பின்னா், சந்தோஷை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா். இதில் பலத்த காயமடைந்த சந்தோஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த சமயநல்லூா் போலீஸாா், சந்தோஷின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதற்கிடையே, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தேவநாதன் கொலை நிகழ்ந்த வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினாா். இந்தக் கொலை குறித்து சமயநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.