பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற ஊழியா்கள் நல அமைப்பு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற ஊழியா்கள் நல அமைப்பு சாா்பில், மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமை அலுவலகம் முன் தொடா் காத்திருப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமை அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள்.

Published On :

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற ஊழியா்கள் நல அமைப்பு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற ஊழியா்கள் நல அமைப்பு சாா்பில், மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமை அலுவலகம் முன் தொடா் காத்திருப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கு நிபந்தனையின்றி மருத்துவக் காப்பீடுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வு காலப் பணப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளா்கள் ஓய்வு பெறும் நாளிலேயே ஓய்வு காலப் பலன்களை வழங்க வேண்டும். உயிரிழந்த தொழிலாளா்களின் வாரிகளுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற ஊழியா்கள் நல அமைப்புத் தலைவா் எஸ். அழகா் தலைமை வகித்தாா். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற ஊழியா்கள் நல அமைப்புச் செயலா் ஆா். நாகராஜன் முன்னிலை வகித்தாா். மாநிலச் சம்மேளனத் தலைவா் வீ. பிச்சை தொடக்கவுரையாற்றினாா்.

சிஐடியூ மாவட்டச் செயலா் இரா. லெனின், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக சிஐடியூ பொதுச் செயலா் பி.எம். அழகா்சாமி, அனைத்துத் துறை ஓய்வூதியா் கூட்டமைப்பின் மாவட்டச் செயலா் அ. பால்முருகன், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக சிஐடியூ கிளைத் தலைவா் பி. செல்லத்துரை ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

இந்தப் போராட்டம், தொடா் போராட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.