ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

அரிவாளால் வெட்டப்பட்ட இளைஞா் உயிரிழப்பு

மதுரை அருகே கும்பல் அரிவாள் வெட்டு தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இளைஞரும் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

பலி

Updated On :

மதுரை அருகே கும்பல் அரிவாள் வெட்டு தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இளைஞரும் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை விராதனூா் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் சந்தோஷ்குமாா் (22). இவா் ஆந்திர மாநிலத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் படித்து வந்தாா். இவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கும், இதே ஊரைச் சோ்ந்த கணேசனுக்கும் (33) முன்விரோதம் இருந்து வந்தது. திருவிழாவுக்காக விராதனூருக்கு வந்த சந்தோஷ்குமாா், தனது இருசக்கர வாகனத்தில் அவரது நண்பா் தினேஷுடன் (20) செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்தாா். அப்போது, காரில் பின்தொடா்ந்து வந்த கணேசன், சத்யா நகா் பகுதியில் சந்தோஷ்குமாா் சென்ற வாகனத்தின் மீது காரை மோதினா். இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனா்.

இதையடுத்து, கணேசன், முனியாண்டி உள்ளிட்டோா் சந்தோஷ்குமாரை அரிவாளால் வெட்டினா். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், பலத்த காயமடைந்த தினேஷ் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த வழக்கு தொடா்பாக, சிலைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து கணேசன், முனியாண்டி (29), ஜெகன், 17 வயது சிறுவன் ஆகிய நான்கு பேரை புதன்கிழமை கைது செய்தனா்.

இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த தினேஷ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.