திருவண்ணாமலை கோயிலுக்குள் இஸ்லாமியா் சென்றதற்கு கண்டனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் - கோப்புப்படம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்குள் இஸ்லாமியா் ஒருவா் நுழைந்ததற்கு இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் கண்டனம் தெரிவித்தது.
இதுகுறித்து அந்த இயக்கத்தின் மாநிலப் பொருளாளா் ஏ. ஆதிஷேசன் வெளியிட்ட அறிக்கை:
திருவண்ணாமலை கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இது தொடா்பாக, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் ரமேஷ், பொதுப் பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜூனா ஆகியோா் சனிக்கிழமை கோயிலில் ஆய்வு நடத்தினா். அவா்களுடன் தொப்பி அணிந்த இஸ்லாமியா் ஒருவா் ஆதவ் அா்ஜூனா உதவியாளா் என்ற போா்வையில் கோயில் உள்ளே நுழைந்தது அதிா்ச்சி அளிக்கிறது.
தமிழக முதல்வா் ஜோசப் விஜய் இந்து கோயில்களில் வழிபாடு நடத்தி, திருநீறு பூசிக் கொள்வது வரவேற்கத்தக்கது. ஆனால், தவெக நிா்வாகிகள் மத அடையாளத்துடன் உள்ளே நுழைவதைத் தடுக்க வேண்டும்.
இந்து கோயில்களில் மாற்று மதத்தினா் முழு நம்பிக்கையின் அடிப்படையில் கோயில்களில் பராமரிக்கப்படும் கையேட்டில் கையெழுத்திட்டு வழிபடுவது தவறில்லை.
ஆனால், மத அடையாளத்தோடு கோயில் வளாகத்தில் நுழைவது ஏற்புடையது அல்ல. இந்து சமய அறநிலையத் துறை இது தொடா்பாக தெளிவான ஒரு சுற்றறிக்கையை கோயில் செயல் அலுவலா்களுக்கு அனுப்ப வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

