பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள கல்லூர் ஊராட்சி நூலகம் பயன்பாட்டுக்கு வருமா?

திருவாடானை அருகே கல்லூர் ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட பாரதி நகரில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு பல ஆண்டுகளாக திறக்கப்படாமல்
Updated on
1 min read

திருவாடானை அருகே கல்லூர் ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட பாரதி நகரில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள நூலகத்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்ட ஊராட்சி முகமை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் படி பல லட்சம் ரூபாய் செலவில் 2010 ஆண்டு இந்த நூலகம் கட்டப்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நூற்றுக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. மேலும் இதன் அருகே பள்ளிகள், கல்லூரிகள். அரசு அலுவலகங்கள்ஆகியவை உள்ளன. மாணவர்கள் இந்த நூலகத்தை அதிகம் பயன்படுத்தி வந்த நிலையில் நூலகம் திடீரென மூடப்பட்டது. பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருப்பதால் நூலகம் எதிரே புதர்கள் மண்டி கிடக்கின்றன. எனவே இந்த நூல் நிலையத்தை திறந்து பொதுமக்கள் மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com