ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ராமநாதபுரத்தில் 214 பேருக்கு தொழில்கடன் வழங்க பரிந்துரை

ராமநாதபுரம் மாவட்டத்தில் 214 பேருக்கு தொழில் செய்ய வங்கிக் கடன்கள் வழங்க தொழில் முனைவோர்களுக்கான நேர்முகத் தேர்வுக்குழு பரிந்துரை செய்கிறது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 11:30 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் 214 பேருக்கு தொழில் செய்ய வங்கிக் கடன்கள் வழங்க தொழில் முனைவோர்களுக்கான நேர்முகத் தேர்வுக்குழு பரிந்துரை செய்கிறது.
  பாரதப்பிரதமரின் சுயவேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் சுயதொழில் செய்யும் பயனாளிகளை தேர்வு செய்வதற்கான நேர்முகத்தேர்வுக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தலைமையில் அவரது அலுவலகத்தில் நடைபெற்றது.
    இக்கூட்டத்துக்கு மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் ப.மாரியம்மாள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கே.எஸ்.சுரேஷ்பாபு, கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரிய உதவி இயக்குநர் பாரதி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சுயவேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் ஆர்.சியாமளாநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.    இக்கூட்டத்தில்  சுயமாகத் தொழில் செய்ய வேண்டி வங்கிக்கடன் கேட்டு விண்ணப்பித்திருந்த நபர்களிடம் தொழில் முனைவோர்களின் கல்வித்தகுதி, தொழில்களை சிறப்பாக செய்வதற்கான சாத்தியக் கூறுகள், சந்தை வாய்ப்புகள்,வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தும் தகுதி, நிர்வாக மேலாண்மை ஆகிய குறித்து திறனாய்வு செய்யப்பட்டது.
  கூட்டத்தில் மாவட்டத் தொழில் மையத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 161 பேர், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் சார்பில் 41 பேர், கதர் கிராமத் தொழில்கள் வாரியத்தின் சார்பில் 12 பேர் உள்பட மொத்தம் 214 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.  தேர்வு  செய்யப்பட்ட 214 பேருக்கும் ரூ.69.84 லட்சம் மானியத்தில் ரூ.215.66 லட்சம் கடன் வழங்கிட பல்வேறு வங்கிகளுக்கு பரிந்துரை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.    நேர்முகத்தேர்வுக்குழுக் கூட்டத்தில் பாண்டியன் கிராம வங்கி மேலாளர் குசலவன் உட்பட அரசு அலுவலர்கள்,பல்வேறு வங்கிகளின் மேலாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.