கந்து வட்டி கொடுமையை தடுக்கக்கோரி ஆர்பாட்டம்

திருவாடானையில் கந்து வட்டிக் கொடுமையைத் தடுக்க நடவடிக்கை கோரி செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தினர்ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  
Updated on
1 min read

திருவாடானையில் கந்து வட்டிக் கொடுமையைத் தடுக்க நடவடிக்கை கோரி செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தினர்ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  
திருவாடானை ஓரியூர் விலக்கு சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் தாலுகா தலைவர் ரெத்தினம் தலமை வகித்தார். தாலுகா துணைத் தலைவர் நாகநாதன், மாவட்டத் தலைவர் குணசேகரன், தாலுகா செயலாளர் பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  
இதில் கந்து வட்டி கொடுமையை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், நூறு நாள் வேலைக்கான சம்பளத்தை ரூ. 200-இல் இருந்து ரூ.400-ஆக உயர்த்தி வழங்கவும், நூறு நாள் வேலையை 200 நாள் வேலையாக அறிவிக்கவும் வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாவட்ட செயலாளர் கலைராஜன் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com