தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம்: மீனவர்களுக்கு திமுகவினர் ஆறுதல்

துப்பாக்கிகுண்டு பாய்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ராமேசுவரம் மீனவர்களை புதன்கிழமை திமுக மாவட்டச்செயலாளர்

News image
Updated On :16 நவம்பர் 2017, 1:57 am

DIN

துப்பாக்கிகுண்டு பாய்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ராமேசுவரம் மீனவர்களை புதன்கிழமை திமுக மாவட்டச்செயலாளர் சுப.த.திவாகரன்சந்தித்துஆறுதல் கூறினார்.
 ராமேசுவரம் மீனவர்கள்கடந்த திங்கள்கிழமை பாக் நீரிணை பகுதியில் மீன்பிடித்தபோது, துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் மீனவர்கள் ஆரோக்கியதாஸ் பிச்சை மற்றும் ஜான்சன் ஆகியோர் காயமுற்றனர். இந்திய கடலோரக் காவல்படையினர் தங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மீனவர்கள் இருவரையும் புதன்கிழமை திமுக மாவட்டச்செயலாளர் சுப.த.திவாகரன் சந்தித்து ஆறுதல்கூறினார். மேலும் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
இதனையடுத்து செய்திளார்களிடம்அவர் கூறியது:
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதன்பேரில் காயமடைந்தமீனவர்களை சந்தித்துப்பேசினோம். வாழ்வாதாரத்திற்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை பாதுகாக்கவேண்டிய இந்திய கடலோரக் காவல்படையினரே தாக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.
மேலும் மீனவர்களுக்குஉரிய சிகிச்சை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்களுக்கு உயர்சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளளோம். மத்திய பாஜக அரசு மீனவர்களை பாதுகாக்க தவறிவிட்டது.
இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் 150 க்கும் மேற்பட்ட படகுகள் மற்றும் 60-க்கும் மேற்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மத்திய மாநில அரசுகள்
உடனடியாக எடுக்க வேண்டும் என்றார். திமுகதலைமை செயற்குழு உறுப்பினர் அகமதுதம்பி,நகர் செயலாளர் நாசர்கான்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சம்பத் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.