சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

எஸ்.எப்.ஐ. மாவட்ட செயலாளரை தாக்கிய சார்பு ஆய்வாளர் மீது புகார்

இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளரை தாக்கிய பரமக்குடி நகர் காவல் சார்பு ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மார்க்சிஸ்ட்

Updated On :5 ஏப்ரல் 2018, 8:23 am IST

இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளரை தாக்கிய பரமக்குடி நகர் காவல் சார்பு ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை ராமநாதபுரம் எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளனர். 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் வி.காசிநாததுரை அளித்துள்ள மனுவில், பரமக்குடியில்  கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி உணவகம் ஒன்றில் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் சென்ற காவலர்களை, அங்கு பணிபுரியும் தொழிலாளி பணத்தைக் கொடுத்து விட்டு செல்லுமாறு கூறியதால் அத்தொழிலாளியை போலீஸார் தாக்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பரமக்குடியில் காவல்துறையினரைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்அனுமதி பெறவில்லை எனக்கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் டி.ராஜா, இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஐ.கே.தெட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கு தொடர்பாக இருவரையும் காவல்நிலையத்துக்கு சொந்த ஜாமினில் விடப் போவதாக கூறி போலீஸார் அழைத்துள்ளனர். ஏப்ரல் 3 ஆம் தேதி புதன்கிழமை காவல்நிலையத்துக்கு வந்த ஐ.கே.தெட்சிணாமூர்த்தி காவல்நிலையத்தில் பேசியதை செல்போனில் பதிவு செய்வதாக கூறி அவரைத் தாக்கியுள்ளனர்.  சுட்டுக் கொன்று விடுவதாகவும் கூறி கொலை மிரட்டல் செய்துள்ளனர்.  ஐ.கே.தெட்சிணாமூர்த்தி   செல்போனில்  எதுவும்  பதிவு  செய்யவில்லை  எனக் கூறியும் அவரைத்  தாக்கிய பரமக்குடி நகர் காவல்நிலைய காவல் சார்பு ஆய்வாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  சார்பு ஆய்வாளர் தாக்கியதால் தெட்சிணாமூர்த்தி ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அப்புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும் பரமக்குடியில் நாளை வெள்ளிக்கிழமை திண்டுக்கல் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருப்பதாகவும், இதனையடுத்து காவல்துறையை கண்டித்து  மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.காசிநாததுரை தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.