ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே காரங்காடு கடற்கரை கிராமத்தில் புனித செங்கோல் அன்னை ஆலயத்தில் பாஸ்கு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவாடானை அருகே காரங்காடு கடற்கரை கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற புனித செங்கோல் மாத அன்னை ஆலயம் உள்ளது. பாவ மன்னிப்பு தலமா இருந்து வருகிறது. இங்குள்ள மாதா சிலை சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் கடலில் மிதந்து வந்ததாக கூறப்படுகிறது.
இப்பகுதியில் கிறிஸ்தவர்களின் புனித தலமாக விளங்கும் இத்திருத்தலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை ஆகிய இருநாட்கள் பாஸ்கு திருவிழா நடைபெற்றது. முதல் நாள் ஏசுவின் பாடுகள், இரண்டாம் நாள் உயிர்ப்பின் பாஸ்கு ஆகிய நிகழ்வுகள் உள்ளூர் பிரமுகர்கள் மூலமாக நாடகமாக நடித்துக்காட்டினர். இதில் காரங்காடு பங்கு தந்தை சுவாமிநாதன், திருவெற்றியூர் உதவி பங்கு தந்தை தாமஸ்
ஆல்வாய் எடிசன் மற்றும் காரங்காடு, புதுக்காடு,புதுபட்டிணம் சேத்திடல் கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








