சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கமுதி பசும்பொன்னில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :

கமுதி பசும்பொன்னில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 கூட்டத்துக்கு மாநில பொருளாளர் ஆர்.முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். மாநில அமைப்புச் செயலர் செல்வவிநாயகம் முன்னிலை வகித்தார். இதில், வரும் அக்டோபர் 30-இல் நடைபெறவுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
 அதைத்தொடர்ந்து, புதிய நிர்வாகிகள் தேர்வு, புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில மாணவரணி செயலர் வி.கே.முத்துராமலிங்கம், கிழக்கு மாவட்ட செயலர் மதியழகன், ஒன்றியத் தலைவர் பூமிநாதன் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். ஒன்றிய இளைஞரணித் தலைவர் ராஜீவ் காந்தி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.